கேரள வெள்ளத்தில் கடவுளிடம் பேசிய மக்கள்: யார் அந்த கடவுள்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலரும் ஈடுபட்டாலும் மீனவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் அம்மாநில மக்கள்.

அந்த அளவுக்கு தங்கள் படகுகள் மூலம் மக்களை விரைந்து காப்பாற்றி வருகின்றனர், கடலில் இருக்கும் காரணத்தினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் மக்களை காப்பாற்றுகின்றனர்.

கேரள முதல்வர் மீனவர்களை தங்களின் சொத்து என்றும் அவர்களது சேவை கண்டிப்பாக அங்கீகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஒரு வீட்டில் மாட்டிக்கொண்ட சில பெண்களை நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு பெண் கூறியதாவது, இறந்து விடுவேன் என நான் நினைத்தேன் ஆனால் என்னை காப்பாற்றினார்கள்.

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன், ஆனால் அந்த உதவியை பெற்றுக்கொண்டால், கடல் எங்களை மன்னிக்காது, மீன் கொடுத்து எங்களை காக்காது என்று ஒதுங்கிகொண்டார்கள். மீனவர்கள் கடவுளாக வந்ததாகவும், கடவுளிடம் பேசியதாகவும் கூறுகிறார் அப்பெண்மணி.

இதற்கிடையில் மீனவர் சங்க தலைவர் பேசியது அவர்கள் மீதான மரியாதையை இன்னும் கூடியிருக்கிறது. அவர் கூறும்போது “ முதலமைச்சர் அவர்களே, கேரளாவின் இராணுவம் என நீங்கள் எங்களை கூறியது போது பெருமைப்பட்டோம், இறுமாப்பாக இருந்தது.

ஆனால் ரூ.3000 கொடுப்பேன் என நீங்கள் கூறியது எங்களை வலிக்கச் செய்கிறது. காசு கொடுப்பீர்கள் என நினைத்தா வந்தோம், கஷ்டப்பட கூடாதே என நினைத்தே வந்தோம் என்று தெரிவித்துள்ளார்,

மீனர்வர்கள் ஆற்றிய பணிக்கு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்