வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கிய விஜய்! வெளியான முழு விபரம்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகரான விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 70 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளார்.

கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநிலமே நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அம்மாநில முதல்வர் உதவி கோரினார்.

இதையடுத்து அம்மாநிலத்திற்கு உதவிகள் வந்து கொண்டே இருக்கின்றன. திரைப்பிரபலங்கள் பலரும் கேரளாவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரான விஜய் கேரள மக்களுக்காக 70 லட்சம் ரூபாய் நிதியுதவியாக கொடுத்துள்ளார். இது மற்ற தமிழ் நடிகர்களை விட அதிகம் ஆகும்.

இந்நிலையில் நடிகர் விஜய் இந்த பணத்தை கேரளாவில் உள்ள மக்களுக்காக தன்னுடைய மக்கள் இயக்கத்தில் உள்ள ரசிகர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்களை வழங்குவதற்காக கொடுத்துள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலம் இந்த பொருட்கள் கேரளாவில் உள்ள பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. அம்மாநிலத்தில் விஜய் படம் அதிக விலை கொடுத்தும் வாங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்