கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விமானநிலையத்திற்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

பெருவெள்ளம் காரணமாக கொச்சின் விமானநிலையம் பதிக்கப்பட்டதால், விமானநிலையத்திற்கு 220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கொச்சின் சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் வெள்ளம் காரணமாக விமானநிலையத்திற்கு 220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமானநிலையத்தின் கட்டிடங்களை மறுசீரமைக்க வேண்டும், அதுமட்டுமின்றி 2.5 கி.மீற்றர் வரை இருந்த விமானநிலையத்தின் மதில் சுவர் சேதமடைந்துள்ளது.

ஓடுதளம், டாக்சிகள் செல்லும் பாதை, இருந்த கடைகள், மக்கள் செல்லும் டெர்மினல் பகுதி, மின் உபகரணங்கள் என பல சேதமடைந்துள்ளன.

விமானநிலையங்களில் முதன் முறையாக சோல பவர் சிஸ்டம் இங்கு இருந்தது, அதுவும் இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்