ஏழை ரசிகர் பெயரில் ஒரு கோடியை கேரளா வெள்ளத்துக்கு கொடுத்த பிரபல நடிகர்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ரசிகர் ஒருவரின் பெயரில் கேரளாவுக்கு ஒரு கோடி நிவாரண நிதி அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் மாநிலத்தை பெரிதும் பாதித்துள்ளது.

கேரளாவுக்கு நடிகர்கள் உட்பட பவ்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ரசிகர் ஒரு சமூகவலைதளத்தில், என்னிடம் பணம் இல்லை, அதற்கு பதில் கேரளா மக்களுக்கு உணவு தர விரும்புகிறேன், அதை செய்வது எப்படி என சுஷாந்திடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுஷாந்த், உங்கள் பெயரில் நான் ஒரு கோடியை தருகிறேன், உதவி தேவைப்படும் நம் கேரளா நண்பர்களுக்கு பணம் சேருகிறதா என்பதை உறுதிபடுத்துங்கள்.

இந்த விடயத்தை என்னை செய்ய வைத்ததற்கு நன்றி, உங்களை நினைத்து நீங்களே பெருமை கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்