கேரள வெள்ளத்தில் சிக்கிய வயதான நபர்! ஊடகவியலாளர் செய்த நெகிழ்ச்சி செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் வெள்ளத்திற்கு மத்தியில் தத்தளித்து வந்த நபரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற ஊடகவியலாளாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.]

கேரளாவில் பெய்து வரும் பேய் மழையால், அம்மாநில மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் அங்கு தற்போது என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பதை நேரடியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ஊடகவியலாளர்கள் நேரடியாகச் சென்று, அங்கிருக்கும் நிலைமையை செய்தியாக தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் பிரபல ஊடகத்தின் செய்தியாளரான ஒருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் கேரளாவின் நிலையை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

அப்போது வயதான நபர் வெள்ளத்தில் தடுமாறிய நிலையில் வந்துள்ளார். இதைக் கண்ட அந்த ஊடகவியலாளர் அவரை மீட்டு பத்திரமான இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது அந்த வயதான நபர், ஊடகவியலாளரை கட்டிப் பிடித்த படி இருந்துள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்