விபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்: தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்.. வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், பைக்கில் பயணம் செய்யும் தம்பதி முன்னால் இருந்த வண்டியின் மீது மோதியதில், தம்பதி சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

ஆனால், அவர்கள் வந்த வண்டி மட்டும் நிற்காமல் செல்கிறது. அதை உற்று நோக்கும்போது அதில் சிறிய குழந்தை ஒன்று தெரிகிறது.

வண்டி மெதுவாகச் சென்று லொறியை கடந்து வலது புறத்தில் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி நிற்கிறது. வண்டியில் இருந்த குழந்தை புல் தரையின் மீது விழுகிறது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து குழந்தையைத் தூக்குவது போல வீடியோவில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்