தூக்கு கயிற்றில் தந்தை.. பிரிட்ஜில் தாய்: சூட்கேஸில் குழந்தைகள்! ஒரே வீட்டில் கிடந்த 5 சடலங்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

அலகாபாத்தில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் அருகே துமகன்ஞ் பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குஷ்வாக- ஸ்வேதா தம்பதியினர். இவர்களுக்கு ப்ரீத்தி (8), சிவானி (6), ஸ்ரேயா (3) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

35 வயதான மனோஜ் நேற்று மாலை தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

மறுநாள் காலையில் வீட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பார்த்த பொழுது, மனோஜ் நடுவீட்டில் மின் மின்விசிறியில் சடலமாக தொங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவரது மனைவியின் உடல் பிரிட்ஜிலும், குழந்தைகளின் உடல்கள் சூட்கேசிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டி கதவு உள்தாழிடப்பட்டிருந்ததால், மனோஜ் தான் 4 பேரையும் கொலை செய்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தான் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்