கேரளாவில் நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகொப்டரில் ஏற்றியது எப்படி?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில், ஆலுவா என்ற பகுதியில் உயிருக்கு போராடிய நிறைமாத கர்ப்பிணி சஜிதாவை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணியை காப்பாற்றியது குறித்து கடற்படை கமாண்டர் விஜய் வர்மா கூறியதாவது, அனைவரையும் காப்பாற்றுவது போன்று ஒரு கர்ப்பிணியை காப்பாற்றுது என்பது கடினமான ஒன்று.

முதலில் டாக்டர் மகேஷை மொட்டை மாடியில் இறக்கினோம். அவர் சஜிதாவைப் பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும், எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் என்று கூறினார்.

சஜிதா தைரியமாகவும் நாங்கள் சொல்வதைக் கேட்பதாகவும் இருந்தார். மற்றவர்களை விட அதிக பாதுகாப்பாக அவரை ஹெலிகாப்டரில் ஏற்றினோம் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்த அரை மணிநேரத்தில் அழகிய ஆண்குழந்தை பிறந்தது.

இன்று சஜிதாவை சந்தித்து வீரர்கள் புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு பரிசுகளை வழங்கியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்