வீட்டில் எங்கு பார்த்தாலும் பாம்புகள்: பயத்தில் தவிக்கும் கேரள மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் வெள்ளம் வடிந்தவுடன் தங்கள் வீட்டுக்கு சென்ற மக்கள் அங்கு பாம்புகள் இருப்பதை கண்டு பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை நின்றுவிட்டதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதோடு, வீடுகளில் உள்ள களிமண்களில் பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் நல்லப்பாம்புகள் மிதக்கின்றன.

இதனால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வீடுகளில் சேர்ந்துள்ள சேற்றை மக்கள் மண்வெட்டி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, பாம்பு போன்ற உயிரினங்களை துரத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்