கேரள வெள்ள நிதிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மாணவி! நடிகர்களை விட அதிகம்

Report Print Raju Raju in இந்தியா

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கேரளாவில் பெய்த பலத்த மழை வெள்ளத்தால் பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது.

கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவல் ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்து முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தை விஜயன் நெகிழ்ச்சியடைந்து பாராட்டியதோடு நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.

ஸ்வகா வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என ரியர் எஸ்டேட் அதிபர்கள் கூறியுள்ளனர்.

நடிகர்கள் பலர் சில லட்சங்களே நிவாரண நிதிக்கு கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய நிலத்தை மாணவி கொடுத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்