12 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தை: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்ற மகளை பலாத்காரம் செய்ததில் மகள் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 40 வயதான ஆணுக்கும், அவர் மனைவிக்கும் 12 வயதில் மகள் உள்ளார்.

கணவன், மனைவியிடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

தாயுடன் தங்கியிருந்த 12 வயது சிறுமி விடுமுறையில் தந்தையை அடிக்கடி சென்று பார்த்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதை பார்த்து சந்தேகமடைந்த தாய் மருத்துமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ஆனால் கருவை கலைக்க முடியாத நிலையில் குழந்தை வயிற்றில் வளர்ந்து சமீபத்தில் ஆண் குழந்தையை சிறுமி பெற்றெடுத்தார்.

முதலில் தனது மாமா தன்னை பலாத்காரம் செய்தார் என கூறிய சிறுமி, பின்னர் தனது அப்பா பெயரை கூறினார்.

இதையடுத்து சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்தனர்.

சிறுமியின் தாய்க்கு அவர் கணவருடன் சண்டை உள்ளதால் வேண்டுமென்றே அவரை சிக்க வைக்க சிறுமியை தூண்டிவிட்டாரா அல்லது சிறுமியின் தந்தை தான் குற்றவாளியா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்