கேரளாவை சீர்செய்ய தேவைப்படும் நிதி எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் தொடரும் மழையால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், கடந்த 8-ம் தேதி முதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 223-ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்த மழை வெள்ளத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது மழை குறைந்துள்ளதால், கொச்சி கடற்படை விமான தளத்தில் பயணிகள் விமான சேவை நேற்று தொடங்கியது. இதேபோல, சாலை, ரயில் போக்குவரத்தும் சீர்செய்யப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு, மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

52 டன் அளவுக்கு அவசரகால மருந்துப் பொருட்களை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. கேரளாவுக்கு 12,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றும், சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் செலவினம், 37, 248 கோடி ரூபாயாக இருப்பதாகவும், மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கப்படும் நிதி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்