வெள்ளத்தில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்: கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கேரளா வெள்ளத்தில் சிக்கி கொண்ட நாயை நபர் ஒருவர் நண்பர்கள் உதவியுடன் காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள ஒரு பாலம் திடீரென வெள்ளம் காரணமாக இடிந்தது. இதையடுத்து அங்கிருந்த நாய் ஒன்று தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இதை பார்த்த அந்த வழியாக வந்த இளைஞர்கள் நாயை காப்பாற்ற முடிவு செய்தனர்.

அதன்படி இளைஞர் ஒருவர் உயிரை பணயம் வைத்து நாயை தனது இடது கையால் இழுக்க முயன்ற நிலையில் அவர் வலது கையை வேறு நபர் கெட்டியாக பிடித்து கொண்டார்.

நீண்ட போராட்டத்துக்கு பின்னர் நாயை இளைஞர் தண்ணீரிலிருந்து மேலே இழுத்தார்.

மனிதநேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்