கேரள மக்களுக்காக அள்ளிக் கொடுத்த நடிகை சன்னி லியோன்! அம்பானி எங்கே போனார் என நெட்டிசன் கேள்வி

Report Print Santhan in இந்தியா

பிரபல நடிகையான சன்னிலியோன் கேரள மக்களுக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்து உதவியதால், அம்பானி போன்ற தொழிலதிபர்கள் இப்போ எங்கே போனார்கள் என்று இணையவாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநில மக்கள் தங்கள் வீடு, உடைமைகள் போன்றவைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இயற்கை சீற்றத்தால், பெரும் இழப்புகளை கேரளா சந்தித்துள்ளதால், கேரளாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான சன்னி லியோன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 5 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.

ஆனால் அதைப் பற்றி சன்னிலியோன் இதுவரை எதுவும் கூறவில்லை.

இதையடுத்து இணையவாசி ஒருவர், கேரளா மக்களுக்காக நடிகை சன்னிலியோன் 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ராம் தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்