பத்து பேர் முன்னிலையில் தாலி கட்டினால் போதும்! கேரள மக்களுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகர்

Report Print Santhan in இந்தியா

பிரபல மலையாள திரைப்படி நடிகரான ராஜீவ் பிள்ளை, தன்னுடைய திருமண வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு, மீட்பு பணியில் இறங்கியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாளப் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர் ராஜீவ் பிள்ளை. இவர் தமிழில் விஜய நடிப்பில் உருவான தலைவா, விஷால் நடிப்பில் உருவான ஆம்பள போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கேரளாவை பெருமழை வெள்ளம் புரட்டிப்போட, தற்போது திருமண வேலைகளை நிறுத்தி மீட்பு பணிகளில் இறங்கியுள்ளார்.

இவர் தன் வீடு இருக்கும் பகுதியில் தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு, அருகிலிருக்கும் நிவாரண முகாம்களில் சேர்க்கும் பணியை கடந்த மூன்று தினங்களாக செய்து வருகிறார்.

மழை ஆரம்பித்த சமயத்தில் தனது திருமணத்தை எளிமையாக நடத்திவிட வேண்டும் என நினைத்தாராம். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் வெறும் பத்து பேர் முன்னைலையில் தாலிகட்டும் சடங்கை மட்டும் நடத்தி, திருமணத்தை இன்னும் எளிமையாக நடத்த ராஜீவ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்