இதை மட்டும் எங்க அம்மா பார்த்தா நான் என்ன சொல்லுவேன்! கேரளாவில் கண்ணீர் மல்க பேசிய பிள்ளைகள்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பெருவெள்ளத்தின் காரணமாக வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், இதை நான் எங்க அம்மாவிடம் எப்படி சொல்வேன் என்று மகன் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள வீடுகள் ஏராளமானவை சேதமடைந்துள்ளது.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருவதால், அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வீடுகளில் புகுந்த நீரின் அளவு குறைந்துள்ளதால், மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் திரிசூரின் சாலக்குடியில் உள்ள சுரேஷ் என்பவரின் பாரம்பரிய வீடு இந்த வெள்ளம் காரணமாக முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இது குறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இதைப் பற்றி நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தும் சேதமடைந்துவிட்டன.

மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். இதை மீண்டும் சீரமைக்க வேண்டும் என்றால் அதிக நாட்கள் தேவைப்படும், ஆனால் அதற்கான பணம் வேண்டுமே, இந்த வீட்டின் நிலைமையை எங்கள் அம்மா பார்த்தார்கள் என்றால், அவர்களிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் சுரேஷின் தங்கை கண்ணீர் மல்க கூறுகையில், எங்களின் நாய் பாதுகாப்பாக உள்ளது. வெள்ளம் வந்தவுடன் நாங்கள் வெளியேறிவிட்டோம்.

என்னுடைய சான்றிதழ்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்