வெள்ள நீரில் கலந்த உதிரப்போக்கு..: ஒரு கேரளத்து பெண்ணின் திக் திக் தருணங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நூற்றாண்டில் காணாத மழை காரணமாக கடவுளின் தேசம் இன்று கண்ணீரில் மிதக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துபாய், கட்டார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கேரளாவில் அதிக பாதிப்பை சந்தித்திருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த கிரேஸி, வெள்ளத்திலிருந்து தப்பித்த `திக் திக்' தருணங்களைப் பகிர்கிறார்.

அவர் கூறியதாவது, எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. வீட்டுக்குள் பாம்பு, பூரான் என விஷ ஜந்துகள் வந்துவிட்டன.

வெள்ளம் பெருமளவில் ஊரைச் சூழ்ந்துவிட்டது. விடிய விடிய மொட்டை மாடியில் மழையில் நனைந்தவாறே நின்றிருந்தோம்.

குளிரில் என் குழந்தைகள் நடுங்கினர். மழைநீரே குடிநீரானது. என்னுடன் இருந்த ஒரு பெண்ணுக்கு நாப்கின் இல்லாததால், நீருடன் உதிரமும் சென்றுகொண்டிருந்தது. வலியில் அந்தப் பெண் துடித்த நிகழ்வை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை,

கயிற்றில் தொங்கியபடி ஒரு வீரர் எங்களை நெருங்கி வந்து மீட்டார். சிறிது நேரத்தில் எங்களை அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் இறக்கிவிட்டார்கள். முதலில் கழிவறைக்கு ஓடி சிறுநீர் கழித்தோம். அப்போதுதான் வயிற்று வலியே குறைந்தது. பிறகுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers