கேரளா வெள்ளத்துக்கு அதிகம் நிதியுதவி அளித்த தமிழ் நடிகர் இவர்தான்: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கேரளா மழை வெள்ளத்துக்கு இதுவரை நிவாரண தொகை அளித்த தமிழ் நடிகர்களில் நடிகர் விக்ரம் தான் அதிக பணம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா தத்தளித்து வரும் நிலையில் பல்வேறு விதத்தில் அம்மாநில மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பலர் கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக நடிகர் விக்ரம் ரூபாய் 35 லட்சம் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் 15 லட்சமும், கமல்ஹாசன் 25 லட்சமும், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்சமும் கொடுத்துள்ளனர்.

விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், தனுஷ் 15 லட்ச ரூபாயும், சித்தார்த் 10 லட்ச ரூபாயும், நயன்தாரா 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்