கேரளா மக்களுக்காக வெளிநாட்டிலிருந்து ஏ.ஆர் ரகுமான் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கேரளா மக்களுக்காக பாடிய பாடல் வைரலாகியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல்வேறு தரப்பினரும் கேரளாவுக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, முஸ்தபா முஸ்தபா என்ற தமிழ்பாடலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் வரியை மாற்றி பாடி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தார்.

இது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்