கேரள முதல்வர் எதற்காக இப்படி விரோதம் காட்டுகிறார்? வைரலான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை இராணுவ சீருடை அணிந்த வீரர் ஒருவர் விமர்சிக்கும் போலியான வீடியோ வைரலாகியுள்ளது.

கேரள வெள்ளத்தில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், Chengannur என்ற இடத்தில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ சீருடை அணிந்திருக்கும் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கேரள முதல்வரை விமர்சித்துள்ளார், நாங்கள் உங்கள் மாநிலத்திற்கு உதவி செய்வதற்கு வந்துள்ளோம், ஆனால் நாங்கள் உங்கள் மாநிலத்தை அபகரித்துவிடுவோம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

உங்கள் மாநில அமைச்சர் kodiyeri balakrishnan, இராணு உதவி தேவையில்லை என கூறியுள்ளார். இந்திய இராணுவ வீரர்கள் மீது எதற்காக இப்படி விரோதம் கொண்டுள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

ஆனால், இந்த வீடியோ போலியானது என்று இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த நபரும் இராணுவ வீரர் கிடையாது. வெள்ள மீட்பு பணிகளில் இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளார்கள், இதனை யாரும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது.

இந்த போலியான வீடியோ கேரளாவில் வைரலானதையடுத்து, அந்த வீடியோ தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்