வெள்ளத்தின் போது செல்பி எடுத்த கேரளா இளைஞர்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்களிடம் இளைஞர் ஒருவர் நடந்த கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முப்படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரை பணயம் வைத்து வீரர்கள் மக்களை காப்பாற்றி வரும் நிலையில் வெட்கக்கேடான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது வீட்டின் மொட்டை மாடியில் நின்ற இளைஞர் ஒருவர் தனது சட்டையை கழற்றி மீட்பு ஹெலிகாப்டரை நோக்கி சுழற்றியுள்ளார்.

இதைப் பார்த்த விமானி கஷ்டப்பட்டு வீட்டின் மொட்டை மாடியின் அருகே ஹெலிகாப்டரை இறக்கினார். ஹெலிகாப்டர் அருகே வந்ததும் அந்த இளைஞர் தன் பையில் இருந்த செல்போனை எடுத்து ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப் பார்த்த விமானி அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த இளைஞர் விமானியை நோக்கிச் செல்லுமாறு கைக்காட்டியுள்ளார்.

ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்களின் மதிப்பு தெரியாத அந்த இளைஞரை எச்சரித்துவிட்டு விமானி ஹெலிகாப்டரை மீண்டும் மேலே எழுப்பி கிளப்பினார்.

இது குறித்து விமானி கூறுகையில், வேகமாக நாங்கள் செயல்பட்டு வரும் நேரத்தில், இளைஞர் கொஞ்சம்கூட மனிதத்தன்மை இல்லாமல் எங்கள் நேரத்தையும் விமானத்தில் பெட்ரோலையும் விரயம் செய்தார்.

இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்