வெள்ளத்தில் பசி கொடுமையால் கதறிய மக்களிடம் அசிங்கமாக நடந்து கொண்ட அமைச்சர்! வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசி கொடுமையால் கதறி அழும் மக்களிடம், முகம் சுளிக்க வைக்க வகையில் அமைச்சர் ஒருவர் நடந்து கொண்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த கொடுமையின் உச்சகட்டமாக பசியில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால் கூட இல்லாமல், தாய்மார்கள் அனைவரும் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவரும் வேளையில், பசியால் வாடிவரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது ஒருபுறமிருக்க கர்நாடகாவிலும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக அமைச்சர் H. D. Revanna, எதோ நாய்களுக்கு ரொட்டி துண்டுகளை தூக்கி வீசுவதை போல, பொதுமக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அவருடைய கீழ்த்தரமான செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்