ஸ்ரீதேவியுடன் நடித்த நடிகை மரணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாலிவுட்டின் பிரபல நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழந்தார்,

கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

இந்நிலையில் நோய் முற்றியதால், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அனைத்து உடல் உறுப்புகளும் செயல் இழந்து விட்டதால் நேற்று இரவில் உயிரிழந்தார்.

மறைந்த சுஜாதா குமாருக்கு ஏராளமான திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

இவர், ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தார், மற்றும் விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்