கேரள வெள்ளத்திலும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் தேவையா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மக்களுக்கு அனுப்பும் நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி அதிமுகவினர் அனுப்பி வைப்பதால் மிகவும் மலிவாக விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எங்கும் அம்மா எதிலும் அம்மா எனும் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் அதிமுகவினர் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது, மக்களுக்கு வழங்கிய அனைத்து நிவாரணப்பொருட்களிலும், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி விளம்பரம் தேடிக்கொண்டார்கள்.

இதுகுறித்து அப்போது தமிழக கட்சிகள் அதிமுகவினரை விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் உலக நாடுகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், அதிமுக அரசின் சார்பாக அனுப்பி வைக்கப்படும் நிவாரணப்பொருட்களில் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடியின் புகைப்படம் ஒட்டப்பட்டு அனுப்பப்படுகிறது.

இப்படி கேரள வெள்ளத்திலும் விளரம்பரம் தேடிக்கொள்ள அதிமுக முயற்சி செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்