கேரள வெள்ளத்திலும் ஆண்களுக்கு ஆணுறை வேண்டும் என கொச்சைப்படுத்திய வாலிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்பட்டு வருகின்றன.

கேரள மக்களுக்கு நிதி உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் பல்வேறு இடங்களில் இருந்து அனுப்பப்படுகின்றன. மேலும் சமூகவலைதளங்களிலும் உதவிகள் கோரப்பட்டு வருகின்றன. இதில் நபர் ஒருவர் சமூகவலைதளத்தில் பெண்களுக்கு தேவையான சுகாதார நாப்கின்கள் தேவைப்படுகின்றன என்று உதவி கோரியுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு, கேரள நபர் ஒருவர், ஆண்களுக்கு தேவையான ஆணுறையும் தேவைப்படுகிறது என மோசமான கருத்தை பதிவிட்டார்.

இவரின் இந்த கருத்து வைரலானதையடுத்து, இவர் மஸ்கட்டில் உள்ள Lulu Hypermarket என்ற நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் Rahul Cheru Palayattu என்பது தெரியவந்துள்ளது.

தனது மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் இப்படி ஒரு உணர்ச்சியற்ற மற்றும் வெறுக்கத்தக்க கருத்தினை பதிவு செய்த காரணத்தால், இவரை பணியில் இருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அந்த நபர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார், நான் சுயநினைவில் இதனை செய்யவில்லை, குடிபோதையில் இருந்த காரணத்தால் இப்படி ஒரு கருத்தினை பதிவிட்டேன் இதனால் எனது வேலையும் பறிபோய்விட்டது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers