வெள்ளத்திலிருந்து மீண்டு வர கேரளாவுக்கு எத்தனை காலம் ஆகும் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

மழைவெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவை புணரமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

வெள்ளம் குறித்து பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன், சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மின்விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடியும்.

கேரளாவை புணரமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும், வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers