வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மது பாட்டில்கள்: கேரளா ஆண்கள் செய்த செயலின் அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கேரளா ஆற்றில் தண்ணீருடன் சேர்ந்து சில பொருட்கள் அடித்து கொண்டு ஓடிய நிலையில் அதிலிருந்து மதுபாட்டில்களை எடுத்த நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.

மழை வெள்ளம் காரணம் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது.

அதில், ஒரு ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடுகிறது, அதன் உள்ளே இருவர் இறங்கிய நிலையில் பெரிய துண்டை கொண்டு அங்குள்ள மதுபாட்டில்களை அதில் வைத்து மூடுகிறார்கள்.

பின்னர் பாலத்தில் தொங்கியபடி இருக்கும் நபரிடம் மதுபாட்டிகள் அடங்கிய துணியை கொடுக்கிறார்கள்.

இதன்பின்னர் அங்கிருக்கும் ஆண்கள் அனைவரும் மதுபாட்டில்களை எடுத்து கொண்டு செல்வது போல வீடியோவில் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்