கேரளாவில் ஒரு வாரமாக சாப்பிடாமல் தவித்த குழந்தை... பறந்து வந்த வீரர்: கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆழப்புலாவிலும் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுள்ளது. முக்கியமாக கடலுக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அதிக அளவில் இங்கு வெள்ள பாதிப்பது ஏற்பட்டுள்ளது.

ஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை விமான படை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த ஒருவாரமாக 2 வயது குழந்தையும் அவரின் தாயும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் வெள்ளம் வந்த காரணத்தால் வீட்டு மொட்டை மாடியிலேயே இரண்டு நாட்களாக தூங்கி இருக்கிறார்கள்.

அந்த வீட்டின் மொட்டை மாடியில் இறங்கிய வீரர்கள் முதலில் அந்த வீட்டில் இருந்த குழந்தையின் அம்மாவை காப்பாற்றினார்கள். அதன்பின் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள் அந்த குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது.

குழந்தையை கயிற்றில் இறங்கி அந்த வீரர் காப்பாற்றி இருக்கிறார். குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் தாய் சந்தோசத்தில், அந்த வீரருக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...