கேரள வெள்ளத்திலும் ஒரு பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
221Shares

கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஞ்சு (வயது 24) என்பவர் வீடும் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் குடும்பத்தினருடன் அங்குள்ள தொடக்க பள்ளியில் 3 நாட்களாக தங்கியுள்ளார்.

அஞ்சுவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்த சமயத்தில் கனமழை பெய்யத்தொடங்கியதால் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர்.

ஆனால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூறியதையடுத்து, அஞ்சு நிவாரண முகாம் அருகில் உள்ள கோவிலுக்கு பாரம்பரிய சிவப்பு பட்டு சேலை அணிந்து நடந்து சென்றார். மணமகன் ஷைஜூவும் குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார்.

கோவிலில் எளியமுறையில் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அஞ்சு மணமகன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமணம் நிவாரண முகாமில் மழை பாதிப்பினால் சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்