கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும்! முன்பே கணித்த பஞ்சாங்கம்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பெரு வெள்ளம் ஏற்படும் என்று பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது குறித்து புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜோதிடம், ஜாதகத்தில் பலருக்கும் நம்பிக்கை இருக்கும், பலருக்கு இருக்காது. ஆனால் ஒன்று, ஜோதிடத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் நிஜத்தில் பல நடந்துள்ளன.

அந்த வகையில் கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என்று, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக பெரும் புயல் உருவாகி , தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபநாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்