வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக திருமணத்தை நிறுத்திவிட்டு மாப்பிள்ளை செய்த செயல்! குவியும் பாராட்டுக்கள்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மருத்துவர் ஒருவர் இன்று நடைபெறவிருந்த தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த கனமழை காரணமாக 19,512 கோடி சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக 58 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்பு பணிகளையும் அவசர மருத்துவ உதவி அளிக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கேரளாவிற்கு பல மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அருண் என்பவரின் திருமணம் இன்று நடைபெறவிருந்தது. ஆனால் அவர் தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு, கேம்ப்பில் இருக்கும் மக்களுக்கு ஒரு மருத்துவராக உதவி செய்து வருகிறார்.

இவரின் இந்த செயலைக் கண்டு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்