கேரளத்தில் பெய்துள்ள மழையின் அளவு எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

பெருவெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான கேரள மாநிலத்தில் கடந்த 80 நாட்களில் மட்டும் 2,346 மி.மீ மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்துவிட்டது.

இதனால் கேரளத்தின் 13 மாவட்ட மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடைமைகளை இழந்து அவர்கள் இருக்க இடம் கூட இல்லாமல் மாற்று துணி கூட இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் திகதி வரை பெய்த மழையின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த 80 நாட்களில் சுமார் 2,346 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் 42 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கேரள மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையானது திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்