கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தாய் ஆன பெண்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பெண்ணொருவர் செயற்கை கருத்தரிப்பு மூலம், தனது கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் கவுரவ்(30). இவரது மனைவி சுப்ரியா ஜெயின்(30) ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் மார்க்கெட்டிங் ஆலோசகராக பணிபுரிந்து வந்தனர்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். எனினும், பலன் கிடைக்காததால் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற விரும்பி, அதற்கான சிகிச்சையை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கவுரவ் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். அதன் பின்னர், சுப்ரியாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் இருந்துள்ளது. கவுரவின் விந்து சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால், செயற்கை கருத்தரிப்பு செய்து குழந்தை பெற விரும்பிய சுப்ரியா, அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சுப்ரியாவின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு செயற்கை கருத்தரிப்பு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

எனவே, வாடகை தாய் மூலமாக குழந்தை பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுப்ரியாவின் கருமுட்டையும், கவுரவின் விந்தணுவும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு வாடகை தாயின் கர்ப்ப பையில் வைத்து வளர்க்கப்பட்டது.

இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பின்னர் வாடகை தாய் மூலமாக சுப்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுப்ரியா இதுகுறித்து கூறுகையில்,

‘எனது கணவர் மூலம் குழந்தை பெற விரும்பினேன். அது தற்போது நடந்துவிட்டது. எனது மகன் கணவர் முகசாயலில் இருக்கிறான். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என விரும்பினோம். அதன்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்