சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Report Print Vijay Amburore in இந்தியா

மத்திய பிரதேசத்தில் காணாமல் போன 3 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின், உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் Burhanpur கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார்.

காணாமல் போய் 4 நாட்களாகியும் வீடு திரும்பாத சிறுமி குறித்து பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தியதில், நீரோடைக்கு அருகில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடலை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், கொடூரமான முறையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அவரது உள்ளுறுப்புகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. மேலும் சிறுமியை கடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் உடல்முழுவதும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பாட்டி கூறுகையில், அன்றைய தினம் வீட்டின் திண்ணையில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டின் பக்கத்தில் இருக்கும் நீரோடை பார்க்க அவள் சென்றுவிட்டாள். நான் 10 நிமிடங்கள் கழித்து அவளது பெயரை சத்தமிட்டு அழைத்த பொழுது எந்தவித பதிலும் வரவில்லை. இதனையடுத்து அவளுடைய அம்மாவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறினேன்.

அவளுடைய அம்மாவும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக நடந்தவற்றை விவரித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மாநில பெண்கள் மற்றும் குழந்தை நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்