கணவருக்கு 'தலாக்' கூறிவிட்டு வேறு ஆணுடன் எஸ்கேப் ஆன முஸ்லிம் பெண்!

Report Print Vijay Amburore in இந்தியா

அரியானா மாநிலத்தில் தினம்தோறும் கொடுமை படுத்திய கணவருக்கு முத்தலாக் கூறிவிட்டு, வேறு ஒரு ஆணுடன் முஸ்லிம் பெண் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனில், அவளுடைய கணவர் மூன்றுமுறை 'தலாக்’ எனக்கூறி விவாகரத்து செய்யும், வழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வரும்பொழுது, முத்தலாக் சட்டவிரோமானது எனக்கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து முத்தலாக் திட்டத்தினை ஒழிக்கும் விதமாக அதற்கான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அரியானா மாநிலம் யமுனா நகர் அருகே உன்ஹேதி கிராமத்தைச் சேர்ந்த ஷாசியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அப்பாஸ் ஷாசியாவை கடுமையாக தாக்கி வந்துள்ளார். இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென ஷாசியா மாயம் ஆகியுள்ளார். அந்த கடிதத்தில், நான் உன்னை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நீ தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்துகிறாய். இதனால் தற்போது வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.

என்னுடைய இந்த முடிவுக்கு யாருடைய தூண்டுதலும் காரணமல்ல என கூறியதோடு, இறுதியாக 3 முறை தலாக் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ஷாசியா திருமணமாக நெருங்கிய உறவினர் ஒருவருடன் மாயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்