வெள்ளத்தால் மூழ்கிய சபரிமலை ஐயப்பன் கோவில்: சென்னை பக்தர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அய்யப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

ஆண்டுதோறும் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும். இதனையொட்டி அய்யப்பன் கோயிலுக்கு செல்வதற்காக இந்தாண்டும் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவில் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து அய்யப்பன் கோயிலில் வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனால், கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்த தமிழக பக்தர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோயில்களில் இருமுடிகட்டி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அய்யப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் இருமுடிகட்டி வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்