செல்போனில் பேச மறுத்த பள்ளி மாணவி: தீ வைத்து கொழுத்திய கொடூர இளைஞர்கள்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தங்களிடம் கைப்பேசியில் பேச மறுத்த பள்ளி மாணவியை, ஆறு இளைஞர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தினமும் மாலை வீட்டிலிருந்து பயிற்சி வகுப்பிற்கு சென்றுவந்துள்ளார்.

அப்போது சில இளைஞர்கள் அவரை மறித்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒருநாள் கைப்பேசி ஒன்றை குறித்த மாணவியிடம் கொடுத்துள்ளனர். அத்துடன், தங்களிடம் இரவு நேரங்களில் அந்த கைப்பேசியில் இருந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த மாணவி, இளைஞர்கள் கொடுத்த கைப்பேசியையும் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர்களில் ஒருவரின் வீட்டிற்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், இளைஞரிடம் பெற்றோரிடம் புகார் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞர் தனது நண்பர் என 6 பேர் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மாணவியின் பெற்றோர் அங்கு இல்லை. பின்னர், அந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெய்யை மாணவியின் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளனர்.

இதனால் மாணவியின் உடல் பற்றி எரிந்ததுடன் வீட்டிலும் தீப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த இளைஞர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என்பது தெரிய வந்தது.

அவர்களில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்