ஓராயிரம் நன்றி தமிழர்களே! கேரளா இளைஞர் வெளியிட்ட மனதை கலங்க வைக்கும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் தமிழக மக்களை பாராட்டி மலையாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

கேரளாவில் கடந்த மூன்று வாரமாக பெரிய அளவில் மழை பெய்து வருவதால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பல பகுதிகளில் இருந்து அங்கு உதவிப் பொருட்கள் குவிந்து வருகிறது.

முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுக்க மக்கள் இதற்காக களமிறங்கி உதவி வருகிறார்கள்

இந்லையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு செல்ல காத்திருக்கும் லொறியை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஓராயிரம் நன்னி தமிழ் மக்களே என்று இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், 10 லொறியில் உதவிகள் வந்து குவிந்துள்ளது என்று மெய் சிலிர்த்து போய் தமிழர்களை பாராட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்