உணவு, குடிநீர் இல்லை... மழை வெள்ளம் குடித்து உயிர் தப்பினோம்: பிரபல நடிகர் உருக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் பெருவெள்ளத்தில் சிக்கி 3 நாட்களாக உணவு மற்றும் குடிநீரின்றி தவித்த பிரபல நடிகர் சலீம் குமார் மற்றும் அவரது குடும்பத்தை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

கேரளாவின் பறவூர் பகுதியில் குடியிருக்கும் பிரபல நடிகரும் இயக்குனருமான சலீம் குமார் தமது வீட்டில் தஞ்சமடைந்துள்ளவர்களை மீட்க வலியுறுத்தி நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

பெருமழையால் அப்பகுதியில் வெள்ளம் சூழந்த நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 45 பேர் நடிகர் சலீம் குமாரின் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

அவர்களுக்கான உணவு மற்றும் உதவிகளை செய்து வந்த சலீம் குமார், தமது வீட்டின் இரண்டாம் நிலையிலும் வெள்ளம் புகுந்துள்ளது எனக் கூறி உதவி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மீட்பு குழுவினர் சலீம் குமார் குடும்பம் மற்றும் அவரது வீட்டில் தஞ்சமடைந்திருந்தவர் என அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களாக உணவு, குடிநீர் ஏதும் இல்லாததால் மழை நீரை பாத்திரங்களில் சேகரித்து அதை குடித்து உயிர் தப்பியதாக சலீம் குமார் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்