கேரளா வெள்ளம்! முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களுக்கு உதவிய இளைஞர்.. நெகிழ்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் பெண்கள் படகு மீது ஏற இளைஞர் ஒருவர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.

பொது மக்கள் பலரும் மீட்பு படையினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் தத்தளித்த பெண்களுக்கு உதவிய விதம் மனதை தொட்டுள்ளது.

அதாவது, தண்ணீரில் நின்றிருந்த படகில் ஏற முடியாமல் சில பெண்கள் சிரமப்பட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் தண்ணீரில் குனிந்து படுத்து கொண்டு தனது முதுகை காட்டினார்.

இதையடுத்து அவர் முதுகின் மேல் கால்களை வைத்து பெண்கள் படகில் ஏறினார்கள்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்