சீமானை சிறையில் அடையுங்கள்! மேலிடத்தில் இருந்து காவல்துறைக்கு வந்த திடீர் உத்தரவு

Report Print Arbin Arbin in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு காவல்துறைக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியதற்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தான் காரணம் என்று பொலிஸ் தரப்பில் நம்பி வருகின்றனர்.

மட்டுமின்றி, முதல் தகவல் அறிக்கையில் கூட நாம் தமிழர் கட்சியினரால் தான் போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்போதே சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சீமான் உயர்நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்று தப்பினார்.

மேலும், பொலிசாரின் கெடுபிடி அதிகமானதால் சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைவர்கள் பலரும் ஸ்டெர்லைட் குறித்து பேசுவதை குறைத்துக் கொண்டனர்.

சீமான் மீண்டும் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்துள்ளதால் ஸ்டெர்லைட் விவகாரத்தை அவர் கையில் எடுக்கலாம் என்று தமிழக அரசு கருதுகிறது.

இதனால் அவர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசாத வகையில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு காவல்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்