கர்ப்பிணி மனைவியை ஆசையாக பார்க்க வந்த கணவனுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர் வேடமிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திரிபாதி என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். ஆனால் அவரைப் பார்க்க மருத்துவமனையில் சில கட்டுப்பாடுகள் விதித்தனர்.

இதனால் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவர்கள் போல வெள்ளை நிற கோட் அணிந்துகொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உலா வந்துள்ளார்.

ஆனால் திரிபாதி நடவடிக்கையைச் சந்தேகப்பட்ட பொலிசார் அவரிடம் விசாரித்த போது அவர் மருத்துவர் இல்லை என தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தச் சம்பவம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்