இதுதாம்மா என் பென்ச்! கேரளாவில் மகளின் பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்த குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெருவெள்ளத்தில் மொத்தமும் இழந்த ஒரு பழங்குடியின குடும்பம் தங்களது மகள் படிக்கும் பாடசாலையில் கடந்த 10 நாட்களாக தஞ்சம் புகுந்துள்ளது.

வயநாடு பகுதியின் மணியங்கோடு ஆற்றோரத்தில் இருக்கிறது லட்சுமி அம்மாவின் வீடு. இவரது 3 பிள்ளைகளில் ராதிகா,சிதாரா ஆகிய இருவரும் பாடசாலை செல்கின்றனர்.

இவர்கள் பகுதியில் 8ம் திகதி காலையில் இருந்தே தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. அதை பொருட்படுத்தாத லட்சுமி அம்மாவுக்கு நேரமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்குத் திடீரென தண்ணீர் வீட்டை ஆக்கிரமித்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய லட்சுமியம்மா பிள்ளைகளைக் காப்பாற்றினால் போதுமென எல்லோரையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பெயர் தெரியாத ஒருவர் பெருவெள்ளத்தில் சிக்கிய லட்சுமியம்மா குடும்பத்தினரை மீட்டு முண்டேரியில் இருக்கிற அரசுப் பள்ளியில் தங்க வைத்துள்ளார்.

முண்டேரி முகாமிலிருந்த 90 சதவிகித மக்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு பள்ளி அறையிலும் நான்கு குடுப்பங்கள் வரை தங்கியிருக்கிறார்கள்.

லட்சுமியம்மாளின் 10 வயது மகள் ராதிகா அதே பாடசாலையில் தான் படித்து வருகிறார். தற்போது லட்சுமி அம்மாளும் குடும்பமும் ராதிகா படித்துவரும் அதே வகுப்பறையில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்