காதலிக்காக இப்படி செய்யலாமா! பொலிசாரை கலங்க வைத்த சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தனது காதலியை சமாதானப்படுத்த இளைஞர் ஒருவர் செய்த விடயம் பொலிசாரை கலங்கடித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சிஞ்வாட் பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் கெதீகர்(25). இவருக்கும் இவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது காதலியை சமாதானப்படுத்த நிலேஷ் ஒரு புது முயற்சியை கையாண்டார்.

அதாவது, பிம்ப்ரி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ’என்னை மன்னித்துவிடு ஷிவ்டெ’ என்ற வார்த்தைகள் அடங்கிய பலகைகளை வைத்துள்ளார். இந்த பலகைகள் பல முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக பொலிசார் கூறுகையில், ‘அண்மையில், நிலேஷிற்கும் அவரது காதலிக்கும் இடையே ஏதோ சண்டை நிகழ்ந்துள்ளது. அதனால், அவரை சமாதானப்படுத்த இவ்வாறு செய்துள்ளார் நிலேஷ்.

அவரது காதலி மும்பையிலிருந்து கடந்த 17ஆம் திகதி பிம்ப்ரிக்கு திரும்பியுள்ளார். அதனால் வரும் வழி எங்கும் சுமார் 300 பலகைகளை நிலேஷ் வைத்திருக்கிறார். இவருக்கு உதவியாக அவரது நண்பர் விலாஸ் ஷிண்டே இருந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து கடந்த 16, 17 ஆகிய திகதிகளில் இரவில் முக்கிய பிரதான சாலைகளில் பலகைகளை வைத்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்