யாராவது காப்பாத்துங்க! கேரளா வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

நடிகையும், எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருமான சீதாலட்சுமி கேரளா வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை சீதாலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம்.

பாதுகாப்பற்ற முறையில் நாங்கள் உள்ளோம், இங்கு குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளதால் எங்களை காப்பாற்ற எதாவது செய்யுங்கள் என கோரியுள்ளார்.

இதனிடயில் தற்போது சீதாலட்சுமியும் அவருடன் இருந்தவர்களும் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகவலை அவரே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்