கேரளாவில் 3 நாட்களாக உணவின்றி மூச்சுவிட சிரமப்பட்ட கொடுமை: காலில் விழுந்து நன்றி தெரிவித்த பெண்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 33 பேர் இறந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று மாலை ஆறு மணியளவில் இந்தியன் ஏர்போர்ஸ் வீரர்கள் எம்.ஐ.எஸ்.கியூ என்ற ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மீட்புபணிக்காக சென்றனர்.

மூச்சு திணறும் அபாயத்தில் சுமார் மூன்று நாட்களாக உணவின்றி நிலப்பரப்பு மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தாழ்வான பகுதியில் வெள்ள இடர்பாடுகளில் சிக்கிதவித்து கொண்டிருந்த 28 இளம்பெண்களை போராடி மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த பெண்கள் வீரர்களில் காலில் விழுந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்