மாமனார் செய்த இரக்கமற்ற செயல்: தற்கொலை செய்து கொண்ட மருமகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனைவி, தனது மாமனாரிடம் கெஞ்சியும் அவர் வீட்டுக்கு அழைக்க மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் அஞ்சன்குமார் (37). இவர் மனைவி அர்ச்சனா (31).

தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். இந்நிலையில் அர்ச்சனாவை அஞ்சன்குமாரும் அவர் பெற்றோரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு அர்ச்சனா துரத்தப்பட்டுள்ளார்.

பின்னர் தனது தந்தை ரகுநாத் மற்றும் தாய் குசும் மிஸ்ராவுடன் சென்று தங்கிருந்தார் அர்ச்சனா.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை ரயில் முன்னால் பாய்ந்து அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அர்ச்சனாவின் மரணத்துக்கு அவரின் கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என ரகுநாத் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் பெண்ணுக்கு கடந்த நவம்பரில் மூளை பக்கவாதம் ஏற்பட்டது.

அப்போது அவருக்கு சரியான சிகிச்சையளிக்காத அஞ்சனும் அவர் பெற்றோரும் உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து வேறு பெண்ணை மணக்க நினைத்த அஞ்சன் அர்ச்சனாவை வீட்டை விட்டு துரத்தினார்.

கடந்த சில மாதங்களாக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட அஞ்சனும் அவர் பெற்றோரும் அர்ச்சனாவை வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி கெஞ்சியுள்ளார்.

ஆனால் இரக்கமின்றி அதற்கு மாமனார் மறுத்ததோடு திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த அர்ச்சனா அதிகாலை 3 மணிக்கு நாங்கள் தூங்கி கொண்டிருந்த வேளையில் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கவுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்