துயரத்திலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய கேரளா: ஆனால் தமிழகம் என்ன செய்தது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் மக்களை காக்க வேண்டிய பெரும் நெருக்கடியில் உள்ள கேரளா அரசின் உயர் அதிகாரிகள், தங்களும்ககு நிதியுதவி அளித்தவர்களுக்கு முறையான நன்றியும், கடிதமும் உடனே அனுப்பி வருகிறார்கள்.

இப்படி நன்றி கடிதத்தை பெற்றவர்கள் பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் தந்தவர்களின் முகவரி மற்றும் நெட்பேங்கிங் மூலமாக பணம் அனுப்பியவர்களின் முகவரிக்கு உடனடியாக அவர்கள் அனுப்பிய தொகையை பெற்றுக்கொண்டோம் என கேரளா நிதியமைச்சக முதன்மை செயலாளர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்புகிறார்.

அந்த அரசு கடித எண் மற்றும் முத்திரை, கையெழுத்திடப்பட்ட அந்த கடிதத்தில் அனுப்பிய தொகை, எந்த வழியில் பணம் வந்தது அதுப்பற்றிய விவரத்தோடு அந்த கடிதம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதே சம்பவம் 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள நிவாரண சம்பவத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.

2015ல் தமிழகத்தில் கடுமையான மழை பெய்தது ,உணவுப்பொருள் இல்லாமல், இருக்க இடம்மில்லாமல் மக்கள் தவித்தனர். தவித்த மக்களுக்கு தமிழகம் மற்றும் பிற மாநில பகுதிகளில் இருந்து மக்களால், சமூக சேவை அமைப்புகளால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களில் அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் ஜெ படம் போட்ட ஸ்டிக்கர் ஓட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு சில ஆயிரம் முதல் கோடிகள் வரை பணமாக, காசோலையாக தமிழக முதல்வராக இருந்த ஜெ, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பலரும் வழங்கினார்கள்.

அப்படி வழங்கப்பட்ட தொகைக்கு இன்று நன்றி எனக்கூறி இன்றுவரை ஒரு நன்றிக்கடிதம் அனுப்பவில்லை தமிழகரசு என்கிறார்கள் நிதியுதவி வழங்கியவர்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்