பெருவெள்ளத்தில் அப்படியே சரியும் வீடுகள்..ஹீரோவாக மீட்பு படையினர்! கேரளாவை உலுக்கிய வீடியோ காட்சிகள்

Report Print Santhan in இந்தியா

கன மழை காரணமாக வீதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடியதால், கேரளாவில் இருந்த வீடுகள் அப்படியே சரியும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேய் மழை பெய்து வருகிறது. இன்று வரை கூட மழை நின்றபாடில்லை.

இன்று முதல் மழை குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக இதுவரை 324 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை, தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.அதிலும் ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அவர்கள் உணவுகளை ஹெலிகாப்டர் உதவியின் மூலம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து பேய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் அணைகள் திறக்கப்பட்டன. அணையில் திறக்கப்பட்ட நீர் அருகிலிருக்கும் கிராமங்களுக்குள் நுழைந்துள்ளன.

தொடர்ந்து பேய்து வரும் கனமழை, அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போன்றவைகளால் வீதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனால் கட்டப்பட்ட வீடுகள் அப்படியே சரிவது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்