வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்கள்! உயிரை பணயம் வைத்த பெண்: மனதை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in இந்தியா

வெள்ளத்தில் சிக்கித்தவித்த நாய்களை காப்பாற்ற சுனிதா என்ற பெண் தன் உயிரை பணையம் வைத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கேராளவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே அழிவில் உள்ளது. இதன் காரணமாக தற்போது வரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் திருச்சூர் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருக்க்கும் மக்களை மீட்பதற்கு மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சுனிதா என்ற பெண் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு, தனது வீட்டில் யாரும் உதவிக்க வரமாட்டார்களா? என்று காத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் வந்த மீட்பு படையினர், அங்கு யாரேனும் இருக்கிறீர்களா என்று கேட்க, உடனே சுனிதா இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் அவரை மீட்க மீட்பு படையினர் வந்த போது, தண்ணீர் முழுவதும் சூழ்ந்துவிடும் வாருங்கள் போய்விடலாம் என்று கூற, அவர் எந்த பதிலும் கூறாமல் அந்த இடத்திலே இருந்துள்ளார்.

அதன் பின் ஒரு அறையில் சாக்குகளை கொண்டு போர்த்தி பாதுகாக்கப்பட்ட 25 நாய்களை காட்டிய சுனிதா, நாய்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் மீட்பு படையினர் முதலில் நீங்கள் வாருங்கள், நாய்கள் பற்றி விலங்கு அமைப்புகளிடம் உடனடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

சுனிதாவிற்கு நாய்களை விட்டு மனமில்லாத காரணத்தினால் அங்கயே இருந்துள்ளார். நேரம் ஆக அவருடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.

சுனிதா தண்ணீரில் சிக்கினார். அதன் பின் ஒருவழியாக சுனிதாவின் கோரிக்கை கேரளாவின் உள்ள விலங்குகள் நல அமைப்புக்கு சென்றது.

அனைத்து நாய்களையும் மீட்க ஆள் அனுப்பினார்கள். படகுகள் வந்தது. 25 நாய்களோடு சுனிதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

அந்த நாய்கள் குறித்து அவரிடம் கேட்ட போது, எல்லாமே தெரு நாய்கள், சில கைவிடப்பட்ட நாய்கள் என்று கூறியுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்